இக்கதையின் இரண்டாவது அறிமுகம் ஆகாஷ். இவர் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர், இவரின் தந்தை இறந்து விட்டார் இவருக்கு இரண்டு தங்கைகள், இருவரும் அரசு பள்ளியில் படித்து வந்தனர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்தாலும் நல்ல முறையிலும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். முதல் தங்கையின் பெயர் கார்த்திகா மற்றும் இரண்டாவது தங்கையின் பெயர் சௌந்தர்யா. ஒரு நாள் இரவில் சௌந்தர்யாவுக்கு லேசாக காய்ச்சல் ஏற்ப்பட்டது அதனால் ஆகாஷ் ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அப்போது மருத்துவர் இது சாதாரண காய்ச்சல் தான் அதனால் பயப்பட வேண்டாம் என்று கூறினார். அந்த மருத்துவரின் பெயர் அஸ்வின். அவர் சௌந்தர்யாவுக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து வந்தார் ஆனால் அவள் குணமடைய வில்லை அதனால் அஸ்வின் வேறு சில மருந்துகளை கொடுத்து முயற்சி செய்து பார்த்தார் ஆனால் அது வேறு திசையில் மாறியது. தவறான மருந்தை கொடுத்ததால் எதிர்பாராத விதமாக சௌந்தர்யா மூளைச்சாவு அடைந்தால், அதனால் அஸ்வின் ஒரு திட்டம் போட்டான் மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகளை விற்று லாபம் பார்க்கலாம் என்று நினைத்தான் அதனால் சௌந்தர்யா வின் உடல் உறுப்புகளை திட்டமிட்டபடி எடுத்து விற்பதற்கு சென்றான் அப்போது அஸ்வின் தப்பி ஓடிய தை ஆகாஷ் பார்த்து விட்டான் உடனே அறைக்குள் சென்று பார்த்த போது சௌந்தர்யா இறந்து கிடந்தார் அதை பார்த்து ஆகாஷ் அதிர்ச்சி அடைந்தான் அதன் பின் அவளை பார்த்து கதறி அழுதார் ,அஸ்வினை தேடி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று நினைத்தான் ஆனால் அஸ்வின் பெரிய பணக்காரர் ஆனால் இவன் ஏழை , அஸ்வினை கொல்ல வேண்டும் என்று நினைத்தான் ஆனால் அவன் தப்பித்து விட்டான் எங்கு தேடியும் கிடைக்கவில்லை அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆகாஷ் அவனை தேடிக் கொண்டு இருந்தான்.
கதை தொடர்ந்தது .....