Chereads / மகா யாகம் / Chapter 1 - அத்தியாயம் 1

மகா யாகம்

Iniyan_Siva
  • 15
    Completed
  • --
    NOT RATINGS
  • 24.5k
    Views
Synopsis

Chapter 1 - அத்தியாயம் 1

(படிப்பவர்கள் அனைவரும் இக்கதையில் வரும் கதாபாத்திரங்களை கற்பனை செய்து படிக்கவும்.)

நம் நாட்டில் பல பேர் பதவி ஆசைக்காக எதையும் செய்ய நினைப்பவர்களே அதிகம். ஆனால் கஷ்மீர் மாநிலத்தில் டுக்லே என்னும் ஊரில் ஒரு தமிழன் மந்திரியாக பணியாற்றினார். அவர் பெயர் ராஜன். அவர் அரசியலில் அனுபவம் வாய்ந்த மனிதர், நல் உள்ளம் கொண்டவர். அவரும் அவரது மனைவியும் டுக்லே நகரில் வசித்து வந்தார்கள். இத்தனை சொத்தும் பதவியும் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. என்னவென்றால் அவர்களுக்கு திருமணம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆனது, ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை, அதனால் அவர்களின் வாழ்க்கை நிம்மதியாக இல்லை. ஒரு நாள் ராஜனுக்கு ஒரு யோசனை தோன்றியது, நாம் ஏன் ஒரு குழந்தையை தத்தெடுக்க கூடாது? என்று அவன் சிந்தித்தான். மறு நாள் அவன் தன் மனைவியை அழைத்துச் சென்று ஒரு குழந்தைகள் ஆசிரமத்திற்கு சென்றான். அங்கு ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்தான். அப்போது அச்சிறுவனுக்கு மூன்று வயது, ராஜன் அவனை நல்லபடியாக பார்துக்கொண்டான். அச்சிறுவனின் பெயர் 'இனியன்'. அவன் ராஜன் தம்பதியர் வாழ்க்கையில் மிகவும் ஒரு முக்கிய பங்கு வகித்துவந்தான்.

மூன்று வருடங்களுக்கு பின்...