Chereads / இரவுக்கு ஆயிரம் கைகள் part1 / Chapter 25 - இரவுக்கு ஆயிரம் கைகள் part25

Chapter 25 - இரவுக்கு ஆயிரம் கைகள் part25

பிரவீன் இறந்து விட்டான். இந்த செய்தியை தீபிகா உணரக்கூட இல்லை. nurse ருக்மணி இந்த செய்தியை தீபிகா கேட்கும்படி சொல்லி பார்த்தாள்.

அப்போதும் அவளிடத்தில் எந்த ஒரு சிறு அசைவும் இல்லை . பரந்தாமன் போலீஸ்காரர்களையும் மீடியாவையும் சமாளிப்பதில் ஈடுபட்டார். அமரன் வந்திருந்தான் . ஒரு மாத விடுப்புக்குள் பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடும் என நம்புவதாக பரந்தாமனிடம் சொன்னான். போஸ்ட்மோர்டெம் ரிப்போர்ட் தெளிவாக சொன்னது பிரவீன் தவறி விழவில்லை யாரோ பலவந்தமாக தள்ளியிருக்கிறார்கள்.

நரேஷ், தீபன், கார்த்திக் மூவரும் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர். யார் இந்த கொலையை செய்திருப்பார்கள் என யோசிக்க தொடங்கினார்கள். போலீஸ் இவர்களையும் விசாரித்தது . பிரவீன் விழுந்திருந்தது ஆளில்லாத புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் . 

அமரனும் தன் பங்குக்கு விசாரணை செய்ய தொடங்கினான் . வீடியோ விவகாரம் அவனுக்கு தெரிய வந்தது .ப்ரவீனுடைய உடைமைகளை நிதானமாக ஆராய்ந்தான் . அதில் என்ன தேடுகிறோம் என்ற தெளிவு அவனிடத்தில் இருக்கவில்லை. ஏதாவதொரு துருப்புசீட்டு கிடைக்காதா என தேடினான் . நீலாங்கரை வீடு சாவியும் ப்ரவீனுடைய போனும் கிடைத்தது . ப்ரவீனுடைய போனில் இருந்த நரேஷ் விடியோவை பார்த்தான். surrender ஆனவர்கள் வேறு உண்மையான குற்றவாளிகள் வேறு என புரிந்து கொண்டான்.நரேஷ் ஐ அழைத்து பேசிய போது அவர்கள் உண்மையை சொல்லிவிட்டார்கள். 

அமரன் ராமை சந்தித்தான். ராம் பிரவீன் இறந்ததற்கு அனுதாபங்களை தெரிவித்து கொண்டான். இந்த கேஸ் முடிவதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அமரன் சொன்னான் . சந்தேகத்தின் பேரில் யாரையும் அரெஸ்ட் செய்யவில்லை போலீஸ். அமரன் அடுத்த கட்டமாக பிரவீன் கொல்லப்பட்ட கட்டிடத்துக்கு சென்றான். போலீஸ் தற்காலிகமாக அந்த buildingகிற்கு சீல் வைத்திருந்தார்கள். இருந்தாலும் உள்ளே சென்று பார்த்தான். பழைய பொருட்கள் ,சிமெண்ட் மூட்டைகள் குவித்து வைத்து இருந்தனர். இவன் பிரவீன் தள்ளி விடப்பட்ட 5 வது மாடிக்கு சென்றான். லேசாக எட்டி பார்த்தான். நீ ஏண்டா இங்கே வந்தே என்ற குரல் கேட்டு திடுக்கிட்டான், சுற்றி முற்றி பார்த்தான் ஒருவரும் இல்லை .பொண்டாட்டியை பாத்துக்க துப்பில்லை உனக்கு மிலிட்டரி ஒரு கேடா? 

யாரது யாரது என்றான். உன் மனசாட்சிடா மரியாதையா இங்கிருந்து போயிடு . தட தடவென படிகளில் இறங்கி ஓடினான். திரும்பி பார்க்க கூட இல்லை . அருகிலிருந்த பெட்டி கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தான் .யாரும் வித்தியாசமா இங்கே வந்தார்களா என விசாரித்தான் . இப்போ யாரும் இங்கே வருவதில்லை சார் என்றான் . 

ஒரு வேலை ஆவியா இருக்குமோ தீபிகாதான் உயிரோடு இருக்கிறாளே . அவன் சென்று பார்த்தபோது தீபிகா தூங்கிக்கொண்டிருந்தாள் . அவள் எப்போது முழித்திருக்கிறாள் . ருக்மணி அருகில் இருந்த ரூமில் ஏதோ படித்து கொண்டிருந்தாள் . குரல் பெண் குரல் போலத்தான் இருந்தது ஆனால் அது தீபிகாவின் குரலும் இல்லை . நாளைக்கு பகலில் போய் பார்க்க வேண்டும் என எண்ணினான் . ப்ரவீனுடைய வாட்ச் அங்கு கிடந்ததை போலீசார் எப்படியோ தவற விட்டிருந்தனர். அந்த வாட்ச் மணி 7 ஐ காட்டியது . பிரவீன் கொல்லப்பட்ட நேரம் அது . ரெண்டு நாள் கழித்து ரெண்டு பேரை அரெஸ்ட செய்தது போலீஸ். அவர்கள்தான் கடத்தியதாகவும் சொன்னது. அவர்கள் பணத்திற்காக கடத்தியதாகவும் அதற்குள் பிரவீன் முரண்டு பிடிக்கவே அவனை தள்ளி விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர். அமரனால் இதை நம்ப முடியவில்லை .

நரேஷ், தீபன், கார்த்திக் மூவரையும் மறுபடி சந்தித்தான் அமரன். இம்முறை ராமும் தீபக்கும் கூட இருந்தனர். மரியாதையா உண்மைய சொல்லுங்க தீபிகா போன்ல என்ன இருந்துச்சு . அதுலதான் தீபிகா பிரவீன் சம்பத்தப்பட்ட வீடியோ இருந்துச்சு . அந்த போன் எங்க இப்ப . நாங்க பிரவீன் கிட்ட குடுத்துட்டோம் . அத ஓபன் பண்ணிங்களா இல்ல password போட்டு லாக் பண்ணி இருந்துச்சு . உங்கள்ள யார் பிரவீனை கொன்னதுன்னு எனக்கு தெரிஞ்சாகணும் . சத்தியமா நாங்க இல்லை சார் . ராம் நீங்க என்ன சொல்லறீங்க . கொலை பண்ணவன் ப்ரவீனுக்கு தெரிஞ்சவன் இல்லை சார். பிரவீன் பத்தி தெரிஞ்சவன் . அதனாலதான் பிரவீனை வர சொல்லி இருக்கான். ரமீஸ்,நந்தா இவங்க ரெண்டு பேரும் ஒரிஜினல் விடியோவை பத்தி தெரிஞ்சவங்க.

 

ரமீஸ் சிகிச்சைக்காக ஜி ஹெச் ல அட்மிட் ஆயிருக்கான். நேத்துதான் அவனை பார்த்தோம் . நந்தா தான் இந்த விஷயம் தெரிஞ்ச இன்னொரு ஆளு . அவனை பிடிச்சோம்னா எல்ல உண்மையும் வெளிச்சத்துக்கு வரும் . அவன் போட்டோ ஏதாவது இருக்கா,அட்ரஸ் ஏதாவது . இப்போதைக்கு இல்லை . அவன் எங்கே இருக்கானு கேட்டதுக்கு triplicane மேன்சன் ல இருக்கானு சொன்னாங்க ஆனா அங்க போய் கேட்டதுக்கு அவன் காலி பண்ணி ரெண்டு மாசம் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க .அவன் போன் number இருக்கு நோட் பண்ணிக்குங்க . அந்த மொபைல் போனும் அவன்கிட்டத்தான் இருக்கணும் . போலீசிடம் சொல்லி நந்தாவை பிடிக்க சொல்ல போதுமான காரணங்கள் இல்லை. அவனுடைய போன் நம்பர் உபயோகத்தில் இல்லை என வந்தது. ராமிடம் அமரன் தயங்கி தயங்கி இந்த குரல் ஒன்று தன்னை மிரட்டுவதாக சொன்னான் . ஆவியாவது ஒண்ணாவது யாரோ உங்களை divert பண்ணுவதற்காக இதை செய்திருக்கிறார்கள் . தீபிகா கண்டிஷன் எப்படி இருக்கு . இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் அவளை கவனிக்காமல் போனதுதான் தவறு என்றான் . நரேஷ் , தீபன், கார்த்திக் மூணு பேரும் ஜாக்கிரதையா இருங்க யார் காண்டாக்ட் பண்ணி கூப்பிட்டாலும் எச்சரிக்கையா இருங்க என்றான் ராம் .ப்ரவீணோட வாட்ச் . இது ஆப்பிள் வாட்ச் . இதுல கூட வாய்ஸ் கால் ஏதாவது ரெகார்ட் ஆயிருக்கான்னு பாக்கலாம் . இது சரியாய் ஒர்க் ஆகல ரிப்பேருக்கு குடுக்க போறேன் . ஹ்ம்ம் ஓகே சார். நாங்களும் ஏதாவது அப்டேட் கிடைச்சா உங்களுக்கு சொல்றோம் .

 நந்தா மேல ஏன் சார் திடீர்னு சந்தேகம் .என்னவோ அவன்தான் அந்த விடியோவை handle பண்ணவன். ஏற்கனவே பிரவீனை மிரட்டி இருக்கணும் . அதனாலதான் fake வீடியோ ரெடி பண்ணி நந்தா அந்த விடியோவை வச்சு ஒன்னும் பண்ண முடியாதபடி செஞ்சுட்டான். இப்போ எதுக்கு நந்தா திடீர்னு அவனை கொல்லணும். யாரோ கொடுத்த assignment தீபிகாவுக்கு வேண்டிய யாரோ இன்னும் இருக்காங்க. இல்ல தற்செயலா நடந்திருக்கலாம் .தீபு நந்தா போட்டோ ஏதாவது இன்ஸ்டாகிராம், facebook ல அப்லோட் ஆயிருக்கானு பாரு . இருக்கு சார் .அதை உடனே எல்லோருக்கும் வாட்ஸாப்ப் பண்ணு. அவசரப்பட்டு அவன்தான் செஞ்சான்னு சொல்ல வேண்டியதில்லை. ஆள கண்டுபிடிக்கணும் . அவனுடைய recent லொகேஷன் ஏதாவது காட்டுதானு பாரு .இல்லே சார் . அவனோட favourite ரெஸ்டாரன்ட் காட்டுது சார் . லாஸ்ட் ஃப்ரைடே போயிருக்கான் . அங்கிருந்து போட்டோ அப்லோட் பண்ணியிருக்கான் . கமீலா ரெஸ்டாரன்ட் . அங்கிருந்த சிசிடிவி களை ஆராய்ந்தான் . கேஷ் கவுண்டர் இல் விசாரித்த போது எதிர் சாலையில் உள்ள ஸ்டுடியோவில் தான் வேலை செய்வதாக சொன்னார்கள் . Fancy ஸ்டுடியோஸ் என்ற அந்த ஷாப் மூடியிருந்தது .

அமரன் நரேஷ், தீபன், கார்த்திக் எல்லோரையும் அழைத்துக்கொண்டு அதே கட்டிடத்துக்கு சென்றான் . இப்போ ஏதாவது குரல் கேக்குதா இல்லையே இங்கேதான் அந்த குரல் கேட்டுச்சே. நீங்களும் போய் ஏதாவது கிடைக்குமா தேடுங்க . ராம் போன் பண்ணியிருந்தான் . நந்தா வேலை பார்க்கும் இடம் தெரிந்து விட்டது . நாளைக்கு அவனை பிடித்து விடலாம் என்று சொன்னான் ராம். எதுக்குடா திரும்ப வந்தே குரல் திரும்ப வந்தது . நான்தான் உன்னை வராதேன்னு சொன்னனே .நீங்க ஒவ்வொருத்தரா சாக போறீங்க இதே கட்டிடத்துல . அமரன் ஓடினான் . கூடவே அவர்களும் ஓடி வந்தார்கள் . தீபன் தீபன் என குரல் கொடுத்தான் நரேஷ் . தீபனை காணோம் . மேலிருந்து சொத்தென விழும் சத்தம் கேட்டது . விரைந்து போய் பார்த்தார்கள் . தீபன் உயிர் பிரிந்து 5 நொடிகள் ஆயிருந்தது .தீபனுடைய உடலை போலீசார் கைப்பற்றினார்கள். அமரன் தான் இங்கே வந்திருக்க கூடாதென வருந்தினான். ராம் அந்த கட்டிடத்தை சுற்றி வந்தான். இங்கே ஒன்னும் இல்லையே . யாரும் வந்த மாதிரியே தெரியலியே . போலீஸ் கைரேகைகளை ஆராய்ந்தது. அந்த கட்டிடத்தின் அருகில் சிசிடிவி காமெராக்களை பொறுத்த உத்தரவிட்டிருந்தது . 

நந்தா ஒரு போட்டோஷூட்டுக்காக கேரளா சென்றிருப்பதாகவும் அவனுடைய போன் நம்பர் கொடுத்தார்கள் . அவனே எடுத்தான் . விஷயத்தை சொல்லாமல் பேசி முடித்தான் ராம். வந்தவுடன் சந்திப்பதாக சொன்னான். தீபன் கொலையும் நரேஷையும், கார்த்திகையும் உறைய செய்தது . நந்தாவும் கேரளா போயிருக்கிறான் . வேறு யார் இதை செய்திருப்பார்கள் என்று யோசித்தான் ராம் . தீபிகாவுடைய பழைய நண்பர்களை சந்தித்தான். அவர்கள் எல்லாம் தீபிகாவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாருமில்லை . அவள் கல்யாணத்துக்கு பிறகு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என்றே சொன்னார்கள் . அந்த குரல் எங்கிருந்து வருகிறது.

 

உண்மை அறியும் பரிசோதனைக்கு அமரன், கார்த்திக் ,நரேஷ் எல்லோரையும் உட்படுத்தினர் . அமரன் சொல்வது உண்மை அப்படி ஒரு குரல் கேட்கிறது ஆனால் அது அமரன் மட்டும் இருக்கும் போது கேட்கிறது .அமானுஷ்யமாக இருக்கும் என்று அமரன் சந்தேகப்பட்டான். நந்தாவை வர சொல்லி விட்டால் என்ன என்று நினைத்தான். அவனுக்கும் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது ? தீபு ஏதாவது தீபிகா போலீஸ் கம்பளைண்ட் குடுத்திருக்காங்களான்னு பாருங்க . யாரவது ஒன்னு சைடு லவர் இருந்திருக்கலாம் . சரிங்க சார். அவனை விசாரிச்சா தெரியும் . நாளைக்கே தீபிகா அம்மாகிட்டே பேசுறேன் . தீபிகா அம்மாகிட்டே பேசியபோது அப்படி ஒருத்தன் இருந்தான் அவன் பெயர் காசி. காசிநாதன் . அவன்தான் என் பொண்ணை தொரத்தி தொரத்தி காதலிச்சான் . என் பொண்ணு திரும்பி கூட பாக்கலை. அவன் வேலையா கூட இது இருக்கலாம் . அவனோட பூர்விகம் காஞ்சிபுரம் . அப்போ நாங்க காஞ்சிபுரத்துலதான் இருந்தோம் .அவனுக்கு பயந்துதான் கல்யாணத்தை அவசர அவசரமா பண்ணோம் .