Chereads / இரவுக்கு ஆயிரம் கைகள் part1 / Chapter 7 - இரவுக்கு ஆயிரம் கைகள் part7

Chapter 7 - இரவுக்கு ஆயிரம் கைகள் part7

ராமுக்கும் தீபுவுக்கும் மூச்சே நின்றுவிட்டது .சஞ்சயை சிங்காரம் கொன்று விட்டான் .நாம இந்த ஊரிலேயே இருக்க வேண்டாம் கொஞ்ச நாள் ரஞ்சனி, ராகவ் கூட இருப்போம் .நமக்கும் அதுதான் safety என்றான் ராம் .

என்னை தொட வந்தான்ல தூக்கி கடல்ல போடுங்கடா அப்பதான் என்னை பத்தின பயம் இருக்கும் . பென்drive ல கேமரா வெச்சது நல்லதா போச்சு. நான் இதை எதிர்பாக்கலே என்றாள் தீபு .விஷயத்தை ராகவிடம் சொன்னான் அதுக்கென்ன தாராளமா தங்கலாம் என்னோட வாடகைக்கு விட்ட வீடு இப்போ காலியாதான் இருக்கு .

ஒருபுறம் ராகவ் ரஞ்சனியோடு இருக்கப்போகிறோம் என்றாலும் மறுபுறம் சிங்காரம் இன்னும் என்னென்ன வேலை செய்வானோ என்ற அச்சம் எழுந்தது . ட்ரைனில் போகலாம் என முடிவெடுத்தார்கள் தீபூவை வீட்டுக்கு போக வேண்டாம் போனால் ஏதாவது உளறிவிடுவாய் போன்ல சொல்லிடு என்றான் .

ராகவ் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து வரவேற்றான் .ஊர் முழுக்க பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது சஞ்சயின் கொலை . போலீஸ் அதிகாரி சஞ்சய் சுட்டுக்கொலை மர்ம நபர்கள் அட்டகாசம் . கிராமத்து வீடு ராமுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது .ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தவன் இப்போதுதான் கிராமத்து பக்கம் வந்திருக்கிறான் .தீபுவும் இந்த அமைதியை ரசித்தாள் . ராமுக்கு எப்படியும் ஷியாம் அவனை தேடி வருவான் என்றே தோன்றியது . சிங்காரத்தோட தொல்லையும் கொஞ்ச நாள் இருக்காது .என்ன பாஸ் இன்னும் யோசனையா சாப்பிடுங்க என சொன்னாள் தீபு .ரஞ்சனியும் தீபுவும் நீண்ட கால தோழிகள் போல பேசி கொண்டனர் .

கோடைகால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே மலேசியா வாசுதேவன் குரலை ராம் சிலாகித்து கொண்டிருந்தான் . நீங்க ரெண்டு பேரும் made போர் each other என்று ரஞ்சனியையும் ராகவையும் பார்த்து சொன்னான் .நான் கிளம்புறேன் தீபு நீ இன்னும் கொஞ்ச நாள் இவங்களோட இரு . நானும் வரேன் பாஸ் என்று சிணுங்கினாள் . சொன்னா கேக்கணும் suppose ஏதாவது பிரச்னைனா நான் உன்னைத்தான் நம்பியிருக்கேன் ஓகே .ராமை பிரிய மனமில்லாமல் அனுப்பி வைத்தார்கள் அவன் வேறொரு கேஸ் சம்பந்தமாய் டெல்லிக்கு போவதாய் பிளான் செய்திருந்தான்.

உண்மையில் ராமுக்கு பெரும் பதற்றமாய் இருந்தது. சஞ்சய் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி .அவனுக்கும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்குமோ என யோசித்தான் .டெல்லி போனால் பிஸ்டல் வாங்க சவுகரியமாக இருக்கும் . தீபுவின் பாதுகாப்புக்கேனும் இதை செய்தாக வேண்டும் .

சிங்காரம் ஏஜென்ட் குமாரை அணுகினான் அவன் வெளிநாட்டு பணத்தை கொண்டு வருவதில் expert . அவனுக்கு சிங்காரம் பற்றி தெரிந்த போதும் வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டான் . மீராவின் டெத் certificate ரவி மூலமாக கிடைத்துவிட்டது . மீராவினுடைய நாமினியாக போய் பணத்தை எடுக்க வேண்டியதுதான் பாக்கி .குமார் அடுத்த வாரம் யு எஸ் போவதற்கென ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான் . அங்கிருந்த பேங்க் officer கூடவும் பேசி இருந்தான் . அவர் ராமுக்கு தகவல் தந்தார்.அங்கிருந்த வாட்ஸாப்ப் குழுவில் சொல்லி போலீஸ் மூலமாக குமாரை அரெஸ்ட் செய்ய பிளான் பண்ணினான் . 

 சிங்காரம் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கவில்லை .குமாரையே முழுமையாக நம்பியிருந்தான் .அதற்குரிய கமிசனையும் பேசி இருந்தான் 

பிஸ்டல் இவன் வசம் வந்ததும் முழு தன்னம்பிக்கையுடன் சிங்காரத்தை இனி தைரியமாக அணுகலாம் என சொல்லிக்கொண்டான் .ராம் சென்னைக்கு வந்ந்துவிட்டான் .அவனுடைய ஆபீஸ் வெகு நாட்களாய் பூட்டி இருந்ததால் சிசிடிவி footage களை ஓட்டி பார்த்தான்.சிங்காரத்தின் ஆட்கள் ,போலீஸ் ஆஃபீசர்கள் என கொஞ்சம் பேர் நோட்டமிட்டு சென்றிருந்தார்கள் . கடைசியாக குள்ளமாக சிவப்பாக தாடி வைத்த ஒரு ஆளை கண்டான் அவசர அவசரமாக அதை தீபு செய்த டிசைன்களுடன் ஒப்பிட்டு பார்த்தான் . அது ஷ்யாமேதான். அவனுக்கு அது திகைப்பை ஏற்படுத்தியது அந்த சிசி டிவி footage எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் ரமேஷை பார்க்க விரைந்தான்.

ரமேஷா போன வாரம்தான் transfer ஆகி போயிட்டார் சார் .இப்ப ரவிதான் in charge அவரும் இந்த சஞ்சய் சார் murder கேசுல பிஸி ஆ இருக்காரு 

சரி ஓகே தேங்க்ஸ் சார் என்றான் . ஷியாம் எதுக்காக என்னை தேடி வந்திருப்பான் வேறெதுக்கு கிளோஸ் பண்ணத்தான் .தீபூவும் சென்னை வந்துவிட்டாள்.ஷியாம் வந்து நோட்டமிட்டதை சொன்னான்.அவனை நாம மீட் பண்ற நேரம் வந்திடுச்சு.நம்ம ஆபீஸ என் வீட்டு மாடிக்கு shift பண்ணா என்னனு யோசிக்கிறேன் .பண்ணலாம் சார் நாளைக்கே அதுக்குண்டான ஏற்பாடுகளை செய்யுறேன் சார் . சிசிடிவி மட்டும் அப்படியே இருக்கட்டும் மறுபடி நிச்சயம் வருவான் 

குமார் நினைத்தபடி பணத்தை எடுக்க முடியவில்லை .பிளாக் செய்து விட்டார்கள் .ஷ்யாமும் வந்து ஒப்புதல் தர வேண்டுமென சொல்லி விட்டார்கள் .சிங்காரம் சஞ்சய் கொலை செய்த விடியோவையம் ,ஷ்யாமின் விடீயோவையும் கமிஷனர் தனி பிரிவுக்கு அனுப்பினான் . நம்முடைய வேலை முடிந்தது தீபு என்றான் .

தீபூவும் அவனும் வெகு நாட்களுக்கு பிறகு சினிமாவுக்கு போனார்கள் .மாலில் ஷாப்பிங் செய்தாள் தீபு . restaurant ல் சாப்பிட்டார்கள் .கமிசினர் யாருயா இவன் என்றார் இவன்தான் சார் ஷ்யாம் இவனைத்தான் டெல்லி போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டதா ரெகார்ட் இருக்கே . விசாரிங்கய்யா இவன் இரு சைக்கோ கொலைகாரன் . தஞ்சாவூர் அப்பு கொலை கேசுல ,தூத்துக்குடி ஹமீது ,முத்து கொலை கேசுல இன்வோல்வ் ஆயிருக்கான்.சிங்காரம் encounter ல போட்டு தள்ள வேண்டியதுதான் வேற சாய்ஸ் இல்ல 

யாரோ நம்மள follow பண்ற மாதிரி இருக்கு சார் . எனக்கும்தான் நீ கண்டுக்காம கார் ல ஏறு . கார் வழுக்கிக்கொண்டு பறந்தது . தீபூவை வீட்டில் drop செய்தான்.ரெண்டு நாள் கழித்து சிங்காரம் encounter செய்யப்பட்டதாக போலீஸ் அறிக்கை சொன்னது .ஹ்ம்ம் என பெருமூச்சு விட்டான் ராம் .போலீஸ் விசாரணைக்கு அழைத்த போது வர மறுத்து சுட்ட போது போலீஸ் திருப்பி சுட்டது .குமாரும் மரணம் .சிங்காரம் எப்பவோ சாகவேண்டியவன்தான் என்றான் ராம். ராகவுக்கும் விஷயத்தை சொன்னான். சென்னைக்கு வர சொன்னான் .எனக்கும் தீபுவுக்கும் ஆபத்து இருக்கிறதுனாலே ஹெல்ப்புக்கு வாங்க என்றான். 

ஓகே ராம் நாளைக்கே வரேன் .

கமிஷனர் அறிக்கை கொடுத்திருந்தார் . தஞ்சாவூர் அப்பு கொலை ,தூத்துக்குடி ஹமீது ,முத்து கொலை எல்லாத்தையும் செஞ்ச சிங்காரம் encounter இல் மரணம் .சே கமிசனர் இப்டி பண்ணுவார்னு நினைக்கல. என்ன பண்றது ஷியாம் ரெகார்ட் அப்படி . அவனை சுதந்திரமா விட்டா இன்னும் நெறைய பேரை கொல்லுவான் . அரசியல் சப்போர்ட் இருக்கோ என்னவோ .ராகவ் இனிமேதான் நாம அலெர்ட் ஆ இருக்கணும் . 

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது என முனுமுனுத்தாள் இந்த பாட்டை பாடுனது யாரு ரஞ்சனியா இல்ல ஹரிணி என்று சிரித்தாள் தீபு.

ராகவ் நான் மறுபடி டெல்லி போறேன் .ஷியாம் கேஸ் கோர்ட் மூலமாதான் solve பண்ண முடியும்னு வக்கீல் சொல்றாரு .நான் போய் என்னனு பார்த்துட்டு அப்டேட் பண்றேன் .meantime நீங்க தீபுவை பத்திரமா பாத்துக்கங்க அவனோட அடுத்த டார்கெட் தீபு தான் . இந்த விஷயம் அவளுக்கு தெரிய வேண்டாம் . be careful 

என்ன ஒரே ஜாலி மூட்ல இருக்க தீபு .ஆமா அதான் நான் விரும்புற பையன் வேற ஊருக்கு போறான் .அந்த சோகத்தை மறைக்கத்தான் பாட்டு பாடுறேன்.

ராம் பிஸ்டல் பற்றிய குறிப்புகளை வாட்சப்பில் அனுப்பியிருந்தான் .அதை எப்படி பயன்படுத்துவது ,எந்த சூழ்நிலையில் பயன்படுத்துவதென விரிவாக அனுப்பியிருந்தான் .இவன் டேபிள் மேலிருந்த லெதர்பேக்கை அடிக்கடி தொட்டுப்பார்த்து கொண்டான் ,அதில்தான் பிஸ்டல் இருந்தது

மேலே ஆபீஸ் மாற்றிய பிறகு பழைய ஆபீஸ் போலல்லாமல் ஒரு சாதாரண கம்பெனி போல் தோற்றமளித்தது .தீபு தொடர்ந்து பழைய ஆபீஸ் காமெராக்களையும் புதிய ஆபீஸ் காமெராக்களையும் கண்காணித்து வந்தாள். ராகவ் ஆச்சர்யத்துடன் அவளை பார்த்தான் இந்த சின்ன வயதில் எத்தனை சாகசம் செய்கிறாள் என்று எண்ணிக்கொண்டான் .

நைட் டின்னர் ஏதாவது வெளியே போலாமா வேண்டாம் இங்கேயே ஆர்டர் பண்ணிக்கலாம் என்றான் ராகவ் .ஏன் சார் பயந்து சாகரீங்க எனக்கு ஒன்னும் ஆகாது . உனக்கு ஷியாம் பத்தி தெரியாது தீபு .அப்பு சாவு இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு .சரி வெளியே போய் சாப்பிடலாம் .ஒன் கண்டிஷன் நான்தான் ஆர்டர் பண்ணுவேன் என சிரித்தான் .தீபுவை பொறுத்தவரை எல்லாமே ரிஸ்க்தான். ரிஸ்க் எடுத்தால்தான் வாழவே முடியும் என நினைக்கிறாள் .ராம் போன் செய்திருந்தான் .சந்தேகப்படுறமாதிரி யாரும் வந்தார்களா என விசாரித்தான் . நாளைக்கு வந்து விடுவேன் என சொன்னான் .

சாப்பிட்டுவிட்டு கை கழுவ போனான் . போனில் பேசுவது போல் அவன் வழியை மறைத்துக்கொண்டு நின்றான் .தீபு இன்னும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். excuse மீ என்றான் . போன் பேசிட்டு இருக்கேனு தெரியுதுல்லே சாரி என்றவாறு இரண்டடி பின் வைத்தான் 

யாரோ அவன் கழுத்தை பிடித்து தள்ளினார்கள் . தீபு ஓடி வந்தாள் . அவர்களை தடுத்தாள். மூர்க்கமாக ராகவை தக்க துவங்கினார்கள். டேபிளில் மோதி கீழே விழுந்தான் கிளிங் என்ற சத்தத்துடன் பிஸ்டல் கீழே விழுந்தது . தீபு ஓடி போய் அதை எடுத்தாள். அதற்குள் அவர்கள் ஓடி விட்டார்கள் 

இவனுக்கு மூக்கிலிருந்து ரத்தமாக கொட்டியது ஐஸ் ப்ளீஸ் என்று கத்தினாள். கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும் என்றான் இட்ஸ் ஓகே . எங்க வீட்டுக்கே போயிடலாம் என்றாள்.என்னாலதான் இப்படி ஆச்சு .ராகவ் நீங்க பிஸ்டல் வெச்சிருக்கேன்னு ஏன் என்கிட்டே சொல்லலே .அதை வெச்சுகிட்டு யாரவது அடி வாங்குவாங்களா ? ரஞ்சனிக்கு தெரிஞ்சா கவலைப்படுவா நீ எதுவும் சொல்லாதே தீபு. இப்போ வலி இருக்கா இல்ல கொஞ்சம் பரவாயில்ல . யாரோ கால்லிங் பெல் அடித்தார்கள் .இரு தீபு நான் போய் பாக்கிறேன் என்றான் ராம் .வேண்டாம் சார் நானே போறேன் வாசலிலே போய் பார்த்தவள் ஐயோ என அலறினாள் ராமும் ராகவும் திகைத்து நின்றனர்