Chereads / Tamil Christian messages / Chapter 38 - Daily ஒரு குட்டி message!*

Chapter 38 - Daily ஒரு குட்டி message!*

*Daily ஒரு குட்டி message!*

Dear friends,

கடவுள் தந்த இந்த *நல்ல நாளுக்காக* நன்றி சொல்லுங்க!!!

நல்லவன்.... நல்லவள்.... அப்படினு சொல்லுறாங்களே! அவங்க யாருனு உங்களுக்கு தெரியுமா? நாங்க கடவுளுடைய பிள்ளை அப்படினு சொல்லுறாங்களே அவங்க யாரு?

அவங்க என்ன என்ன செய்வாங்கனு உங்களுக்கு தெரியுமா?

அதாவது....

உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.

அவன்/ அவள் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

ஆகாதவன் அவன் பார்வைக்குத் அற்பமானவன்; கடவுளுக்கு பயந்தவர்களையோ கனம் பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் இலஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. 👍

இப்படி பட்டவர்களே நல்லவர்கள்.... கடவளுடைய பிள்ளைகள் 👍❤

Do you know? Who is good peoples?

Who is God's Children? Listen....

He who walks with integrity and strength of character, and works righteousness, And speaks and holds truth in his heart. He does not slander with his tongue, Nor does evil to his neighbor, Nor takes up a reproach against his friend; In his eyes an evil person is despised, But he honors those who fear the Lord [and obediently worship Him with awe-inspired reverence and submissive wonder]. He keeps his word even to his own disadvantage and does not change it [for his own benefit]; He does not put out his money at interest [to a fellow Israelite], And does not take a bribe against the innocent. He who does these things will never be shaken.👍❤

இதைப் புரிந்து கொண்டதற்கு நன்றி!!!