*MORNING MANNA' TAMIL 🍞*
*"PRAISE THE LORD!"*
*"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!"*
*12th./NOVEMBER./2021.*
*'காலை மன்னா' தமிழ் 🍞*
*இன்று. 12, 2021. நவம்பர் மாதம்.*
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏🏻*
*கிறிஸ்துவில் நம் ஸ்தானம்*
*'ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்"*
*(ஆதி. 2:23).*
தன்னுடைய விலா எலும்புகளில் ஒன்று எடுக்கப்பட்டதை ஆதாம் அறியாதவனாக அல்லது அதைத் தன் சரீரத்தில் உணராதவனாக இருந்தபோதிலும், அவனால் அதைத் தன்னுடைய ஆவியில் பகுத்தறிந்துகொள்ள
முடிந்தது. ஸ்திரியை ஆதாமுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, அவனுடைய மனைவியின்பால் அவனுடைய உத்தரவாதங்கள் யாவை என்பது குறித்து ஒருவரும் அவனுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நாம் தேவனோடுகூட நடக்கும்போது, சபையில் நம்முடைய ஸ்தானம் இன்னது என்பதையும், நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நம்முடைய கடமைகள் இன்னின்னவை என்பதையுங்கூட நாம் விளங்கிக்கொள்ளக் கூடியவர்களாயிருப்போம். *"நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை"*
*(I யோவான். 2:27).*
*"என் எலும்பில் எலும்பும்"* - மூலபாஷையில் *'எலும்பு'* என்பதற்கு, *மூலக்கூறு* " _என்றுங்கூட ஓர் அர்த்தமுண்டு. ஆதாம் கிறிஸ்துவுக்கு நிழலாட்டமாயிருக்கிறான். கிறிஸ்துவின் மணவாட்டியானவள் கிறிஸ்துவின் அதே மூலக்கூறு (ஜீவியம் அல்லது சுபாவம்) உள்ளவளாயிருக்கிறாள். கிறிஸ்துவின் அதே ஜீவியத்தையும் சுபாவத்தையும் கொண்ட ஒரு கூட்டம் பரிசுத்தவான்௧களை தேவன் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்._
*'இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்'* - _*ஒரு மணவாட்டியைப் பெற்றுக்கொள்ள ஆதாம் எவ்வளவு பெரிய தியாகம் செய்ய வேண்டியதாய் இருந்தது - அவனுடைய முக்கியமான எலும்புகளில் ஒன்று வெளியே எடுக்கப்பட்டது!*_ _ஒரு விலா எலும்பை வெளியே எடுக்க விலா உருவக்குத்தப்படவேண்டும். நம்முடைய மணவாளனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது தம்முடைய விலாவிலே குத்தப்பட்டார். மரண வேதனையோடு கூடிய அவருடைய தியாகமே கிறிஸ்துவின் சபையை உருவாக்கிற்று. நமக்காக அவர் எவ்வளவு அதிகமாக விலைக்கிரயத்தைச் செலுத்தியிருக்கிறார்!_
_கிறிஸ்துவிலிருந்து மணவாட்டி_ *"எடுக்கப்படுவது" மாத்திரமல்ல, மணவாட்டிக்கு இருக்கிற அனைத்தும் - எல்லா ஆசீர்வாதங்களும் அவருக்குள்ளேயே இருக்கின்றன.* _*கிறிஸ்துவுக்குள் நாம் உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவைக்கப்பட்டிருக்கிறோம்; கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் (எபே. 2:7,1:3).*_ *கிறிஸ்து இல்லாமல் நாம் ஒன்றுமில்லை, நமக்கும் ஒன்றுமில்லை.*
*கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்✨.*
*~ 🕊️ 'ஆசீர்வதிக்கப்பட்ட நாள்' ~ 🕊️*
*"🙏🏻கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!"🙏🏻*
_The Pentecostal Mission Publication _ Morning Manna_