*MORNING MANNA' TAMIL 🍞*
*"PRAISE THE LORD!"*
*"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!"*
*10th./NOVEMBER./2021.*
*'காலை மன்னா' தமிழ் 🍞*
*இன்று. 10, 2021. நவம்பர் மாதம்.*
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏🏻*
*தேவன் ஜெபத்துக்கு பதிலளிக்கிறாரா?*
*"இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்"'*
*(யோவான். 16:24)*
_தேவன் நம்முடைய எல்லா ஜெபங்களுக்கும் ஏன் பதிலளிக்கிறதில்லை என்பதை அநேக தேவபிள்ளைகள் விளங்கிக்கொள்ளுகிறதில்லை. ஒர் அர்த்தத்தில், *தேவன் நம்முடைய எல்லா ஜெபங்களுக்கும் பதிலளிக்கிறார்* - சில ஜெபங்களுக்கு அவருடைய பதில், *"ஆம்"* என்பதாகவும், சிலவற்றிற்கு. *'இல்லை'* என்பதாகவும், சிலவற்றிற்கு *'காத்திரு'* என்பதாகவும் இருக்கிறது._
நம்முடைய முடிவு துக்ககரமானதாயிராமல், சந்தோஷமானதாயிருக்க வேண்டுமென்பதே தேவன் நம் ஜெபங்களுக்கு அளிக்கும் பதிலின் முடிவாயிருக்கிறது: *"இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" (யோவான். 16:24)* ஆம், நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரேயன்றி, நாம் துக்கம் நிறைந்தவர்களாயிருப்பதை அவர் விரும்புகிறதில்லை. நாம் கேட்கிற சில காரியங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டால், நம்முடைய ஜீவியத்தின் முடிவில் நாம் துக்கமடைவோம் என்பதைத் தேவன் அறிந்திருக்கிறார்.
தேவபக்தியுள்ள ஒரு தம்பதியினருக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தனர். தகப்பன் தனக்கு ஓர் ஆண்பிள்ளை கண்டிப்பாக வேண்டுமென்று மிக அதிகமாக ஆசித்தார். அவர் உபவாசித்து ஜெபித்து, கர்த்தரிடம் அழுதார். அவருக்கு ஒரு மகனைக் கொடுப்பது தம்முடைய சித்தம் அல்லவென்றும், அவருடைய பெண் பிள்ளைகள் ஓர் ஆண் பிள்ளையைக் காட்டிலும் மேலானவர்களாக இருப்பார்களென்றும், அவர்கள் அவரை கடைசிவரையும் பராமரித்துக்கொள்ளுவார்கள்.. என்று கர்த்தர் மிகத் தெளிவாக அவருக்கு
வெளிப்படுத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து உபவாசித்து, ஒரு மகனுக்காகக் கர்த்தரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். முடிவாக கர்த்தர் அவருக்கு ஒரு மகனை தந்தார். அவன் ஒரு கெட்டகுமாரனாக புகைப்பிடிக்கிறவனாக மது அருந்துகிறவனாக, முறைகேடான ஜீவியம் செய்கிறவனாக மாறிவிட்டான். அவன் நிமித்தமாகத் தகப்பன் மனமுடைந்துபோனார். ஒரு மகன் வேண்டும் என்று தேவனிடம் வற்புறுத்திக் கேட்டதற்காக அவர் மிகவும் மனம் வருந்தினார். கர்த்தரால் வாக்குப்பண்ணப்பட்டபடியே, அவருடைய பெண் பிள்ளைகள் கடைசி வரை அவரைப் பராமரித்துக் கொண்டனர். ஆனால் தகப்பனோ தன்னுடைய கெட்டகுமாரன் நிமித்தம் தன் மரணம் வரை, துக்கமுள்ள ஒரு மனுஷனாகவே இருந்தார். தகப்பன் மரித்தபோது அவருடைய அடக்க ஆராதனைக்குங் கூட மகன் வரவில்லை!
*_அன்பான தேவபிள்ளையே,_ நீ உத்தம இருதயத்தோடு ஜெபித்த சில ஜெபங்களுக்கு நேர்மறையான பதில் அளிக்கப்படவில்லை என்பது மெய்யே, ஆனால் அவைகளுக்குத் தேவன் ஏன் அவ்விதம் பதிலளிக்கவில்லை என்பதை முடிவில் நீ அறிந்துகொள்ளுவாய். உன்னுடைய வாழ்க்கை சந்தோஷத்தினாலேயேயன்றி துக்கத்தில் முடிவுறக்கூடாது என்று தேவன் விரும்புகிறார். நீ பெரிதான நித்திய மகிழ்ச்சி உள்ளவனாய் இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஆகவே உன்னுடைய பதிலளிக்கப்படாத ஜெபங்கள் அனைத்திற்காகவும் நீ தேவனை ஸ்தோத்தரிப்பாயாக.*
*கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்✨.*
*~ 🕊️ 'ஆசீர்வதிக்கப்பட்ட நாள்' ~ 🕊️*
*"🙏🏻 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!" 🙏🏻*
_The Pentecostal Mission Publication _ Morning Manna_