Chereads / SRI NITHYANANDA PARAMASHIVAM / Chapter 1 - BECOME PARAMASHIVA

SRI NITHYANANDA PARAMASHIVAM

DaoisttAfPH9
  • --
    chs / week
  • --
    NOT RATINGS
  • 4.2k
    Views
Synopsis

Chapter 1 - BECOME PARAMASHIVA

20 MAY 2021, THURSDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL

6:57 AM - THE SPH DARSHAN

SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAVAN NITHYANANDA PARAMASHIVAM.

7:05 AM - 7:53 AM - DEVI PARASHAKTI AKASHIK READING IN TAMIL. FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY'S READINGS.

*ஓம் ஓம் ஓம்

ஓம்

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் ஓம்

*ஓம் எனும் பிரபஞ்ச பெருநாதம் ப்ரணவத்து, உயிராய் உதித்தெழுந்த பிரபஞ்ச ஞானம், வேதமும், ஞான வாழ்க்கை முறை ஆகமும், நன்மையொடு உலகிற்கெல்லாம் நலம்படவே, வழியாய் சொல்ல, வரமாய் தந்திட, ஆதிசக்தி, ஈசன் பாதியாய் அமர்ந்தவள், ஜோதிஸ்வரூபிணி, சுந்தரி, சுகயோகினி, நாற்பத்து முக்கோணமாய் நன்றாய் மலர்ந்தவள், நவாபரணங்களாய் நன்றாய்ச் சிறந்தவள், மண்டலங்கள் முழுவதும் மலர்ந்திங்கு, கைலாச சிகரே, சிந்தாமணிக் கிரகத்து, சிறப்போடிருக்கும், கைலாச ஸ்வாமினீ, பரமசிவனார் பாகமாய் இருந்து, பாங்காய் பரமசிவன், அங்கம் ஆளும் அங்காளி பாராளும் பரமேஸ்வரி, நித்தியானந்தன் உயிர் தாங்கி, நிஜாவதாரமாய் இங்கு வந்துதித்தேன் வரம் தரவே.

*நன்மையெல்லாம் தந்திட, உண்மையெல்லாம் சொல்லிட, வரங்கள் அளித்திட, வாழ்வு நலம் பெற, சுகங்கள் தந்திட, சூட்சும ரகசியங்கள் வெளிப்படுத்தி, இறையனார் பரமசிவனார், இவ்வுலகிற்கு அளித்த, வேதமொடு ஆகமங்கள் மெய்யாம் சாத்திரங்கள் சொல்லிட, களவியல் முதல், இறையியல் வரை, இறையனார் தந்த சத்தியங்கள் எல்லாம், இவ்வுலகிற்கு, புரியும் மொழியில் உரைத்து புண்ணியம் தந்திட, நித்தியானந்தன் உயிரும் உடலும் உணர்வும் தாங்கி, நித்தியானந்தன் உயிரும் உணர்வும் உடலும் முழுமையாய் உயிர்த்துக்கொண்டு, நிஜாவதாரமாய், வந்துதித்தேன் பரமசக்தி, மீனாக்ஷி பராசக்தி.

*ஓம் ஓம் ஓம்

*கண் மலர்ந்தேன், கண்ணாத்தாள் இங்கு.

*உங்கள் கண்ணெலாம் மங்களத்துள் நிறைந்து, உணர்வெலாம் உயிர்த்து, நன்மைகள் பெற்றிட, வந்தோம் இங்கு.

*வாழ்வீர்கள் வளத்தோடு.

*ஓம் ஓம் ஓம்

*ஆதித்யாதி க்ரகங்களாய் விரிந்து, பத்து திக்குப் பாலகர்களாய் மலர்ந்து, பாங்காய் உலகிற்கெல்லாம் பக்குவ நன்மை செய்யும், ஓங்காரி ஆங்காளி மலர்ந்தேன் இங்கு, மங்களம் தந்திட.

*ஓம் ஓம் ஓம் ஓம்

*மனிதர்களே! ஜெகமாயை ஜெயிப்பது சுலபம், சாத்தியம், இது சத்தியம் எனும், உண்மையை சொல்லிட, உயிர்த்தெழுந்து வந்தேன்!

*நன்மையை தந்திட நாமே இறங்கி வந்தோம்.

*ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் ஓம் ஓம்

See translation