Download Chereads APP
Chereads App StoreGoogle Play
Chereads

வேட்டையன்

Iniyan_Siva
20
Completed
--
NOT RATINGS
41.1k
Views
VIEW MORE

Chapter 1 - முதல் துளி ரத்தம்

" கதையும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே"

தமிழ்நாட்டில் தென் பகுதியில் ஒரு அழகான கிராமத்தில் மிகவும் அமைதியான இடத்தில் இருபத்தைந்து ஆண்டுகளாக தன் பெற்றோருடன் வசித்து வருகிறார் சந்திரன். இவன் மிகவும் நல் உள்ளம் கொண்ட ஒரு நபர். இவருக்கு படிப்பில் மிக சிறந்த திறமைகளை பெற்றிருந்தார், கல்லூரியில் அதிக மதிப்பெண் பெறுவது இவரது வழக்கம் ஆனால் இவருக்கு ஒரேயொரு குறை தான். இவருக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை கிடையாது ஆனாலும் அவர் மனம் தளராமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் , மறுநாள் கல்லூரியில் ஒரு முக்கியமான பரிட்சை இருந்தது அதில் வெற்றி பெற கடினமாக படித்து கொண்டு இருந்தான் இரவு முழுவதும் படித்து கொண்டே இருந்தார். மறுநாள் காலையில் எழுந்ததும் விரைவாக புறப்பட்டு கல்லூரிக்கு சென்று சிறிது நேரம் படிக்க வேண்டும் என்று நினைத்து வேகமாக கல்லூரிக்கு தன் அப்பாவுடன் மிதிவண்டியில் புறப்பட்டார். காலையில் பத்து மணிக்கு பரிட்சை ஆரம்பமாகும் என்பதால் கல்லூரிக்கு சென்று விட்டார், இவனுக்கு கண் தெரியாத காரணத்தால் பரிட்சை எழுத துணையாக ஒரு ஆசிரியரை கல்லூரி நிர்வாகம் அமைத்து உதவி செய்தது ஆனால் அந்த ஆசிரியர் யாருக்கும் தெரியாமல் விதியை மீறி குடிபோதையில் கல்லூரிக்கு வந்திருந்தார் அந்த விஷயம் சந்திரனுக்கும் தெரியாது, பத்து மணிக்கு பரிட்சை தொடங்கியது, ஆசிரியர் கேள்வி கேட்க சந்திரன் பதிலளிக்க தொடங்கினான்.

சந்திரன் தேர்வு எழுத ஆரம்பித்தார் முதலில் நன்றாக இருந்த உதவி ஆசிரியர் சிறிது நேரம் கழித்து போதை அதிகமாகி மயக்கத்தில் இருந்தான் அதனால் அவர் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவி செய்வது போல் நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் சந்திரனுக்கு இது எதுவும் தெரியாது , பின் சந்திரன் சரியான பதில் சொன்னாள் அதை ஆசிரியர் போதையில் வேறொரு பதில் எழுதுகிறார் அதன்பின் முழு தேர்வும் சந்திரனின் பதிலும் ஆசிரியர் எழுதிய பதிலும் வெவ்வேறாக இருந்தது. சந்திரன் நாம் இந்த முறை நல்ல மதிப்பெண் பெறுவது நிச்சயம் என்று தன் குடும்பத்தாரிடம் பெருமையாக கூறினார்.

ஒரு வாரத்திற்கு பின்...