Download Chereads APP
Chereads App StoreGoogle Play
Chereads

எது நிஜம்?

Iniyan_Siva
--
chs / week
--
NOT RATINGS
25.5k
Views
VIEW MORE

Chapter 1 - ஆரம்ப ஆட்டம்

(கதையும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே..!)

இக்கதையின் முக்கிய நபராக வருபவர் முத்துராமன். இவர் தென் தமிழகத்தில் உள்ள ஒரு ஊரில் வசித்து வந்தார். அந்த ஊரில் இவர் பெரிய பணக்காரராக இருந்து வந்தார். இவரின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அந்த ஊரில் வசித்து வந்தனர். இவரிடம் வேளை பார்த்து வந்தவரின் பெயர் துரைராஜ். இவர் அந்த குடும்பத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் வேலை செய்து வந்தார். ஒரு நாள் இவர் வேலைக்கு வரவில்லை அதனால் முத்துராமன் காரை ஓட்டி சென்றார். இவர் காரில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்தது அதனால் இவர் ஒரு மரத்தில் இடித்து மயக்கம் அடைந்தார். இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இவரை பரிசோதித்த மருத்துவர் , மரத்தில் இடித்த அதிர்ச்சியில் இவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதனால் இவர் குணமடைய வாய்ப்பு குறைவு என்று கூறினார். ஆறு மாதங்கள் கழித்து இவர் குணமடைந்து வீடு திரும்பினார், ஒரு நாள் இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது நெற்றியில் ரத்தத்துளி விழுந்தது. பயந்த நிலையில் எந்திருத்து பார்த்தால் இவரின் கால்கள் துண்டிக்கப்பட்டு இரண்டு அடி தள்ளி இருந்தது, இவரின் கால்களை இவரின் விபத்திற்கு காரணமான நாய் இவரின் கால்களை சாப்பிட்டுக்கொண்டு இருந்தது, பயத்தில் கத்தினார் அங்கு வேலை செய்பவர்கள் வந்து பார்த்த போது அங்கு யாருமே இல்லை. முத்துராமன் தன் கனவில் இச்சம்பவத்தை பார்த்ததை உணர்ந்தார். அதன்பிறகு தன் இடது புறம் பார்த்தால் இரண்டு பாதங்கள் ரத்த கரைகளுடன் இருப்பதை பார்த்தார். மறுநாள் காலையில் மருத்துவரிடம் இதை பற்றி கூறலாம் என்று நினைத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார். அந்த மருத்துவர் மூளையில் அடி பட்டதால் இது போன்ற அமானுஷ்ய சம்பவங்கள் கண் முன்னே வரும் அதனால் கவலை பட வேண்டாம் என்று கூறினார்.

ஒரு வாரத்திற்கு பிறகு....