Chereads / மகா யாகம் II / Chapter 10 - துரோகத்தின் முடிவு

Chapter 10 - துரோகத்தின் முடிவு

தலைவனை கொள்ள வேண்டும் என்று திட்டத்துடன் மாறன் அவன் இருக்கும் இடத்திற்கு சென்றான் சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு சென்றான் அந்த இடமே ஒரு குகை போல் காட்சியளித்தது குகைக்கு முன் நின்று கொண்டு இருந்த காவலாளிகளை கொன்று விட்டு உள்ளே நுழைந்தான் மாறன். இத்தனை சம்பவத்திற்கு மூலக் காரணம் அந்த தலைவன் தான் அவன் யார் என்று பார்க்க சென்றான் உள்ளே நுழைந்து பார்த்த போது அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்தான் மாறன். ஏனென்றால் இவர்கள் அனைவருக்கும் தலைவனாக செயல் பட்டவன் " ராஜன் ". மாறனின் உண்மையான தந்தையான ராஜன் தான் அந்த தலைவன். மாறன் உள்ளே நுழைந்தை ராஜன் முன்னரே அரிந்து கொண்டான் அதனால் அவன் எந்த வித பயமும் இல்லாமல் மிட்டாய்களை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். காவல் அதிகாரிகள் அந்த குகையை சுற்றி வளைத்தனர் பின் ராஜனை கயிற்றால் கட்டி மண்டியிட செய்தனர். பின் மாறன் ராஜனை விசாரிக்க தொடங்கினான்.

முதல் கேள்வி நீங்கள் இன்னும் இறக்க வில்லையா என்று கேட்டார் அதற்கு ராஜன் ஆமாம் நான் இன்னும் இறக்க வில்லை இத்தனை நாட்களாக நாட்டிற்கு கேடு செய்தவன் நான் தான் என்று கூறினார்.

இரண்டாவது கேள்வி எப்படி நீங்கள் தப்பித்தீர்கள் என்று கேட்டார் அதற்கு ராஜன் அந்த திட்டத்தை உருவாக்கியதே நான்தான் அப்புறம் எப்படி நான் சாக முடியும் என்று கேட்டார். நம் நாட்டைப் பொறுத்தவரை நான் இறந்து விட்டேன் ஆனால் இங்கு நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் நான் தான் மூல காரணம். போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்வது தான் என்னுடைய தொழில் அதனால் தான் நாட்டிற்கு முன் நான் இறந்து விட்டதாகவும் நாட்டிற்கு பின் போதை பொருள் கும்பலுக்கு தலைவனாக செயல் படுகிறேன் என்று கூறினார்.

மூன்றாவது மற்றும் இறுதி கேள்வி மாறன் கேட்டார் அதாவது எப்படி இத்தனை செயலுக்கும் மூல காரணமாக இருகிறாய் என்று கேட்டார்.

ராஜன்....

நான் இறந்து விட்டேன் என்று நாடு முழுவதும் நம்ப வைத்தேன் பின்னர் முதலில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருட்களை கடத்தி நாட்டிற்குள் விற்க தொடங்கினேன் பின் அது எனக்கு இருபது கோடியாக லாபம் கிடைத்தது அதனால் அதையே தொழிலாக பயன்படுத்தி கொண்டேன். அதிகமான நபர்கள் எனக்கு உதவி செய்தார்கள் அதில் இனியனும் ஒருவன். அவனுக்கு நான் தான் தலைவன் என்று தெரியாது ஆனால் எனக்கு உதவி செய்தான் பின் அவன் மாட்டி விட்டான் என்று தெரிந்தவுடன் நான் தான் அவனை கொன்றேன். பின் சில நாட்களுக்கு பிறகு தீவிரவாதிகளுடன் பழக்கம் ஏற்பட்டது அதனாலேயே சில இடங்களில் வெடிகுண்டு வெடித்ததற்கு நானும் ஒரு காரணம் அதுவும் இனியனிடம் தான் முழு பொறுப்புகளை கொடுத்தேன்.

அதேபோல் நீ மாயனை முதலில் பார்த்த போது ஒரு பெட்டியை எடுத்துச் சென்றான் ஞாபகம் இருக்கிறதா? அந்த பெட்டியில் என்னுடைய புகைப்படங்கள் மற்றும் சில ஆதாரங்கள் இருந்தன அதனால் தான் அது கண்டிப்பாக என் கைக்கு வர வேண்டும் என்று நினைத்தேன் அதை மாயன் நிறைவேற்றினான். பின் நான் மாயனையும் கொன்று விட்டேன்.

மாறன்.....

அப்போது ஏன் என் அம்மாவையும் காதலியையும் கொன்றாய் ?

ராஜன்...

உன் காதலியை உன்னை பழி வாங்க வேண்டும் என்று நினைத்து கொன்றேன்.

நீ என் வளர்ப்பு மகனை கொன்றதால் தான் நான் உன் வளர்ப்பு தாயை கொன்றேன் என்று கூறினார். மாறன் அதிர்ந்து போய் நான் உன் வளர்ப்பு மகனான மாயனை கொள்ள வில்லையே நீ தானே அவனை கொன்று விட்டீர்கள் என்று கேட்டார் அதற்கு ராஜன் என்னுடைய வளர்ப்பு மகன் மாயன் என்று யார் சொன்னது என்னுடைய வளர்ப்பு மகன் விஜய் என்று கூறினார்.

மாறன்....

விஜயை உன்னுடைய கூட்டாளி என்று நினைத்து ஒரு காவல் அதிகாரியை கொன்றேன் ஆனால் அவன் உன் வளர்ப்பு மகனா?

ராஜன்...

ஆமாம் விஜய் தான் என்னுடைய வளர்ப்பு மகன் அவனை நீ கொன்றதால் தான் உன் அம்மாவை கொன்றேன்.

உடனே திடீரென ராஜன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

" யாகம் முடிவுக்கு வந்தது "