கருவிழியின் அழகிய கருமை நிறம் விரித்ததைப்போல் உள்ள சாலையின் ஓரமாக நடக்கிறான். புத்தகப்பைகளை தூக்கிக் கொண்டு நடக்கும் தோல்கள் அவனின் ஆண்மையை காட்டும்படி அமைந்துள்ளன. அன்பினை வலையாக விரித்து அறிவினை அள்ளும் அவனின் அழகிய மனம்,தான் எங்கு செல்கிறோம் என்று அறிந்தாலும் எண்ணங்களை பறவையாக பறக்க விடுகிறது ஏனென்றால் வழி தவறிய நேசத்தை வைத்து வழி அமைப்பதற்காக. தூண்களில் பற்றியிக்கும் மரத்தின் வேர்களைப் போன்று நரம்புகள் அனைத்திருக்கின்ற கால்கள்
அன்பின் அலைகளில் படகோட்டத்தைப் போன்று அடியெடுத்து வைக்கின்றன.சூரியனின் கதிர்கள் மரங்களின் இலைகளின் உற்புகுந்து அவனின் முகத்தில் தடவி தவல்கின்றன.
காலை வேளையில் மாணவனுக்கே உள்ள நடையில் நடந்து சென்று கொண்டிருந்தான் அந்த சாலையில்...(vv)